தேவையானப் பொருட்கள்:
இஞ்சி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோலை சீவவும். சிறு துண்டுகளாக ந்றுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, எண்ணை காய்ந்தவுடன் மிளகாயைப் போட்டு வறுத்து எடுக்கவும். பின் அதே எண்ணையில் இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய இஞ்சி, மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி வைக்கவும்.
கவனிக்க: விருப்பமானால், வதக்கும் பொழுது ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். உப்பு, காரம் சரிப் பார்த்து, தேவையானால், இறக்கி வைப்பதற்கு முன் சிறிது மிளகாய் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
0 மறுமொழி:
Post a Comment