• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ஓட்ஸ் கேசரி


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கேசரி கலர் - சிறிது
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும். பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும். 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளறவும்.

முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து கேசரியில் சேர்க்கவும். ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

3 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

மிகவும் ருசியாய் இருக்கும் போல ஒட்ஸ் கேசரி செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி.

Chitra சொன்னது…

Super aa irukku ..will try fir sure :)

கமலா சொன்னது…

கோமதி அரசு, சித்ரா, மாலதி,
ஸாதிகா அனைவரின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா - தங்களின் அறிமுகத்திற்கும் நன்றி. சக சமையல் வலைத்தளங்களை அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்த்துக்கள்.

அன்புடன்
கமலா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...