நவராத்திரி


நவராத்திரி செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 8ம் தேதி சரஸ்வதி பூஜையும் (ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்), 9ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.

இந்த பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான்.

தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

கொண்டைக்கடலை, பட்டாணி, காராமணி, வேர்க்கடலை, பச்சை பயிறு, மொச்சைக் கொட்டை, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, சோளம், மற்றும் அவரவர்கள் விருப்பம் போல் எந்தவகை தானியம் அல்லது பருப்பை உபயோகித்து, சுண்டலைத் தயாரிக்கலாம். செய்முறை எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். முழு தானியம் என்றால் 8 மணி நேரமும், பருப்பு வகை என்றால் 2 அல்லது 3 மணி நேரமும் ஊற வைத்து தாளிக்க வேண்டும்.

சுண்டல் குறிப்பு: தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

10 கருத்துகள்:

  1. இந்த சுண்டல் வகைகள் அனைத்தும் நீங்க செய்ததா?

    பதிலளிநீக்கு
  2. தூயா, எல்லா சுண்டலும் நான் செய்ததுதான்.

    வெவ்வேறு தருணங்களில் செய்தது. நவராத்திரியை முன்னிட்டு, புகைப்படங்களை ஒன்றாக இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. விழாக்கால வாழ்த்து(க்)கள் கமலா.

    ஆமாம். விசேஷமா இந்த சுண்டல் செய்யறோமே அதுக்கு எதாவது காரணகாரியம் உண்டா? எதுக்கு சுண்டல்? கொஞ்சம் சொல்லுங்கப்பா.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    நவராத்திரிக்கும், சுண்டலுக்கும் உள்ள தொடர்பிற்கு, இதுதான் காரணம் என்று எதையும் தீர்மானமாகக் கூற முடியாது. சிலர், நவராத்திரி மாதத்தில் பருவநிலை சற்று மாறுவதால், உடல் நிலையும் மந்தமாக இருக்கும். அதை சீராக்கவே புரோட்டீன் மற்றும் சத்து நிறைந்த முழு தானியங்களை உபயோகித்து சுண்டல் செய்து அனைவருக்கும் வழங்குவதாகக் கூறுவர்.

    ஆனால், அந்நாளில் நவராத்திரியின் பொழுது, நவகிரகங்களை சாந்தப்படுத்த, நவதானியங்களை உபயோகித்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்களில் உணவு சமைத்து (கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, எள்ளு, கொள்ளு, உளுத்தம் பருப்பு) படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்.

    நாளாவட்டத்தில், நேரமின்மை, வேலைப்பளு, பொருளாதார மற்றும் இட நெருக்கடி போன்ற காரணங்களால், முன்போல் நவராத்திரியைக் கொண்டாடவும் முடியாமல், அப்படியே விட்டு விடவும் முடியாமல், இருக்கும் இடத்தில், கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுண்டலை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கொழுக்கட்டை அச்சு பத்தி எழுதின கமெண்ட் வரவேயில்ல. சென்னையில எந்த கடையில கிடைக்கும்னு சொல்ல முடியுமா?

    ஸ்ரீலதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீலதா,

    நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். தாங்கள், "அரிசி சுண்டல்" என்ற பதிவின் கீழ் கேட்டிருந்ததால், என் பதில் அங்கே பதிவாகி விட்டது. அங்கே பார்க்கவும். உங்களுக்காக மீண்டும் ஒருமுறை இதோ என் பதில்:

    //ஸ்ரீலதா,

    ரத்னா ஸ்டோர், (புரசைவாக்கம், தி.நகர்) எதிராஜுலு போன்ற பாத்திர கடைகளில் கிடைக்கிறது. வெவ்வேறு டிசைன்களிலும் கிடைக்கிறது. நான் அமைந்தகரையிலுள்ள "அமரா ஸ்டோரில்" வாங்கினேன். அமைந்தகரையிலுள்ள அனைத்து பாத்திரக்கடைகளிலும் (கிட்டதட்ட 7 கடைகள்) கிடைக்கும்.

    அது சரி, இதை ஏன் "அரிசி சுண்டலில்" கேட்டிருக்கிரீர்கள்?//

    பதிலளிநீக்கு
  7. கமலா
    இது எனது அக்காவின் பெயர்.
    அவர்களும் நன்றாக சமையல் செய்வார்கள்.

    நிறைய முறை உங்கள் ப்லாகில் வந்து உலவிவிட்டுப் போயிருக்கிறேன்.
    உங்களின் செய்முறை விளக்கமும், படங்களும்
    சாப்பிட்ட திருப்தியை தந்துவிடும்.

    நான் வீட்டில் சமையல் செய்துவிட்டு அதை ஒரு செகண்ட் பார்த்துவிட்டு
    நீங்கள் மற்றும் தூயா போட்டொவில் போட்ட சமையலையும் நினைத்து பார்த்துக்கொள்வேன். சிரிப்புதான் வரும்.

    சுண்டல்கள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  8. கமலா அருமையான சுண்டல் வகைகள்.

    நானும் எல்லா வித சுண்டலும் அடிக்கடி செய்வதுண்டு. காலை டிபனுபக்கு பிள்ளைகளுக்கு செய்து பள்ளிக்கு அனுப்புவேன்,
    இது பார்க்கவே ரொம்ப யம்மியா இருக்கு
    என் பிளாக்கில் உங்களுக்கு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்களே.
    http://allinalljaleela.blogspot.com/2009/11/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  9. நவாராத்திரிக்கு அருமையான விளக்கம் கொடுத்து இருக்கீங்க ,
    என்ன கொழுக்கட்டைக்கு அச்சு தனியா விற்கிறதா,

    அந்த வரி வரியா வந்து மேலே சிறிய குடுமி போல் வருமே அந்த கொழுக்கட்டைக்கா. நாங்க கையால் தான் செய்வது ஆனால் அது போல் எல்லாம் வராது.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.