தக்காளி பூண்டு குழம்பு


தேவையானப் பொருட்கள்:

தக்காளி - 3
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு பல் - 20 அல்லது 25
சாம்பார் வெங்காயம் - 10 அல்லது 15
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நான்கு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும். ஆறியபின், வெந்த தக்காளியை எடுத்து தோலை உரித்து கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும். வெந்தயம் லேசாக சிவந்தவுடன், பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். அதில் புளித்தண்ணீர், தக்காளி விழுது, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். குழம்பை மூடி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பை தணித்து, சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியானதும், இறக்கி வைக்கவும்.

4 கருத்துகள்:

  1. Your website is very nice.This poodu kulambu is inspiring me to cook and i like to try it soon.It will be useful for me to cook if u give the measurement of tomato,small onions and garlic in grams.cup means,is it 'alakku alavu'?Waiting for your reply.Thanks.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி.

    இந்தியச் சமையலை பொருத்தவரை, எல்லாமே கையளவுதான். பொருட்களை கடையில் மொத்தமாக ஒரு கிலோ, 1/2 கிலோ என்று வாங்குவதால், சமைக்கும் பொழுது எண்ணிக்கை அல்லது ஸ்பூன் அளவில்தான் குறிப்பிடுகிறோம். ஏனென்றால், துல்லியமாக கிராமில் அளவிட முடியாது. இந்த அளவில் சிறிது கூடினாலும், குறைந்தாலும் சுவையில் அதிக மாற்றம் எதுவும் இருக்காது. கப் என்று குறிப்பிடுவது, சாதாரண டீ கப் அல்லது ரைஸ் குக்கருடன் வரும் கப் அளவு. தக்காளி நடுத்தர அளவு (அதாவது, எலுமிச்சம் பழத்தை விட சற்று பெரிய அளவு).

    பதிலளிநீக்கு
  3. very nice kulambu tips. can you pls tell when we need to add nallayennai , it mentioned in the thevaiyana porutkal.

    பதிலளிநீக்கு
  4. நல்லெண்ணையை கடுகு தாளிக்க உபயோகிக்க வேண்டும். மேற்கூறியுள்ள செய்முறையிலேயே கொடுத்துள்ளேன். வருகைக்கு மிக்க நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.