இந்த ஆண்டு முதல், தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்து அரசாணையும் நிறைவேற்றி விட்டது. நாமும் தைத்திருநாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி விட்டோம். ஆனால் வரும் ஏப்ரல் 14ம் நாளில் என்ன செய்வது. அப்படியே விட்டு விடுவதா? மனம் கேட்கவில்லை. அதனால் எழுந்த புலம்பல்தான் அடியிலே:
உன்னை மாற்றி விட்டோம்
அறிஞர்கள் சொன்னார்கள் என்று
இந்த ஆண்டு தப்பித்தோம்
ஞாயிற்றுக்கிழமையில் நீ வருவதால்
அடுத்த ஆண்டு என் செய்வோம்
விடுப்பு வேண்டி விண்ணப்பிப்போம்
என்னை மாற்ற முடியவில்லை
ஏப்ரலில் நீ வந்து பழகியதால்
தப்பாமல் தயங்காமல்
எப்பொழுதும் போல் வந்து விடு
பாங்காக நான் தருவேன்
பாயசமும் பருப்பு வடையும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.