கறிவேப்பிலை



கறிவேப்பிலை மணம் வீசாத தென்னிந்திய சமையலறையைக் காண்பது மிகவும் கடினம்.

பச்சை இலைகள் சிறிது கசப்பாக இருந்தாலும்,எண்ணையில் போட்டு தாளிக்கும் பொழுது அருமையாக மணக்கும். இந்த இலைகளை நாம் வெறும் வாசத்திற்கு மட்டும் தாளிப்பில் சேர்த்து விட்டு, சாப்பிடும் பொழுது ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால், கண்டிப்பாக நாம் இவற்றை உணவோடுச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். மேலும், இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.