தேவையானப்பொருட்கள்:புழுங்கலரிசி - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:புழுங்கலரிசியை 4 அல்லது 6 மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் உப்பு சேர்த்து, கிரைண்டரில் போட்டு, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டி மாவாகக் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, சூடானவுடன், எண்ணைத் துணியால் தேய்த்து விட்டு, ஒரு கரண்டி மாவை ஊற்றி, இலேசாகப் பரப்பி விடவும். அடையைச் சுற்றி, ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.