கோதுமை மாவு கேசரி


தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:

கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி, மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத்தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும். மாவு சிறிது நேரத்தில், வெல்லப்பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்) ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.

2 கருத்துகள்:

  1. //கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்//

    ஆங்கிலத்தில் இதன் பெயர்களை சொல்ல முடியுமா??

    பதிலளிநீக்கு
  2. Wheat flour (what we use for making chapati) - 1 cup
    Jaggery (powdered) - 3/4 cup

    முழு குறிப்பையும் ஆங்கிலத்தில் அறிய, இங்கே சொடுக்கவும்:
    http://www.kamalascorner.com/2007/09/wheat-flour-kesari.html

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.