ஜுஜுபி


ஜுஜுபி, சிவப்பு ஈச்சை, சீனா ஈச்சை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப்பழம் சீனாவைத் தாயகமாகக் கொண்டது. 4000 அண்டுகளாக பயிரிடப்படும் இந்த மரம் சீனாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கும் பரவி, இந்தியாவிலும் விளைகிறது. உருண்டையாகவும், நீளவடிவிலும், நெல்லிக்காயளவிலிருந்து எலுமிச்சம் பழ அளவிற்கு இருக்கும் இந்தப்பழம், நூற்றுக்கணக்கான வகைகளை உடையது.

அட இது என்னப் பழம் என்று பார்க்கிறீர்களா? அதாங்க நம்ம இலந்தை பழம்.

வட இந்திய மாநிலங்களில் விளையும் பழம் சற்று நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். சதைப்பற்றும் அதிகமாக இருக்கும்.


தமிழ்நாட்டில் சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும். தள்ளு வண்டியில் வைத்து பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும். உப்பு, மிளகாய்பொடி தூவி பொட்டலம் போட்டு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.

அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை பொறுத்தவரை, நான் அறிந்த ஒரே தின்பண்டம் "இலந்தை வடை" தான். (வேறு பண்டங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்). வெயிலில் காய வைத்தப் பழத்திலிருந்து கொட்டைகளை நீக்கி விட்டு, அத்துடன் கொஞ்சம் புளி, மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இடித்து, வடை போல் மெல்லியதாகத் தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். கிராமத்துக் கடைகளில் கிடைத்து வந்த இது, இப்பொழுது நகர அங்காடிகளிலும் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த இது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. வயிற்று வலி, தொண்டைப்புண், மலச்சிக்கல், குடற்புண் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த வல்லது.

காய்ந்தப் பழத்தைப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுபடும்.

என்னதான் மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதில்லை. ஆனாலும், இதைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூட நாட்கள் நினைவிற்கு வராமல் போகாது.

11 கருத்துகள்:

  1. :-))...உண்மைதான்..பள்ளிக்காலங்கள்தான்
    நினைவிற்கு வருகிறது! நகரங்களில் கிடைத்தாலும்..அதில் எண்ணெய் போட்டு பளபளப்பாக்கி விடுகிறார்கள்..வாங்கவே யோசனையாயிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு..மருத்துவ குணங்களை அறிந்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  3. நனறி சந்தனமுல்லை. தாங்கள் கூறியுள்ளதுபோல் எண்ணை போட்டுதான் விடுகிறார்கள். அதுவும் காரலெடுத்த மட்டரக எண்ணையைப்போட்டு கெடுத்து விடுகிறார்கள். சீமை இலந்தம் பழம் என்னும் பெரிய சைஸ் பழம் பரவாயில்லை. இயற்கையாக வலைப்பையில் போட்டுத் தருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. இலந்தம் பழம் என்றாலே என் நினைவுக்கு வருவது இலந்தை பழ மிட்டாய் தான். எங்கள் ஊர்க் கடைகளில் சிறிய பாகேட்டுகளில் அடைத்து வைத்து விற்பார்கள். இது மற்ற மிடாய்களைப் போல் கெட்டியாக இல்லாமல் இஞ்சி ஊறுகாய் பதத்தில் இலந்தைப் பழ விதைகளோடு இனிப்பாக, கருமை நிறத்தில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இலந்தம் பழம் என்றாலே என் நினைவுக்கு வருவது இலந்தை பழ மிட்டாய் தான். எங்கள் ஊர்க் கடைகளில் சிறிய பாகேட்டுகளில் அடைத்து வைத்து விற்பார்கள். இது மற்ற மிடாய்களைப் போல் கெட்டியாக இல்லாமல் இஞ்சி ஊறுகாய் பதத்தில் இலந்தைப் பழ விதைகளோடு இனிப்பாக, கருமை நிறத்தில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சுவைத்ததில்லை. தகவலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எப்பல்லாம் ஊருக்கு (கோவை) போறேனோ அப்பல்லாம் மறக்காம சாப்பிடற ஒரு பொருள் இலந்தை வடையும், இலந்தைப் பொடியும். ஒரு தடவை இங்கே அமெரிக்காவுக்கும் கொண்டு வந்தேன், என் வீட்டுக்காரருக்கு இன்டிரட்யூஸ் செய்ய. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பட்சணம் அதுதான். அதை செய்யும் முறையைப் பற்றி எழுதி இருந்தது ரொம்ப சந்தோஷம். அது போலவே அதோட குணங்களும் தெரியாது. இப்ப தெரிஞ்சுகிட்டதிலும் மிக சந்தோஷம். தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  8. தங்கல் வருகைக்கு மிக்க நன்றி அன்னு அவர்களே. தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்புதான், என் வலைத்தளத்திற்கு அச்சாணி.

    பதிலளிநீக்கு
  9. இலந்தை பொடி, இலந்தை வடை கேள்விபடாத வார்த்தைகள் ,
    அக்மார்க் சென்னவாசிகளுக்கு இதெல்லாம் தெரியாது .
    இனிப்பான இலந்தை பழம் மருத்துவ குணமுடையது

    பதிலளிநீக்கு
  10. After reading this i am getting my school days remembering.... Thanks kamala mam.... all your recipes are very healthy...

    பதிலளிநீக்கு
  11. மிக்க நன்றி உதய ராவ் அவர்களே.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.