புதினா


புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.

ஜீரண சக்தியை தூண்டக்கூடியது. வாய் துர் நாற்றத்தைப் போக்க வல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக உடற்சூட்டைத் தணிக்க உதவும்.

பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

புதினா சமையற் குறிப்புகள்:

புதினா சட்னி
புதினா உருளைக்கிழங்கு கறி
புதினா சாதம்

3 கருத்துகள்:

  1. என் இளமைக்காலத்தில் ஈழத்தில் இதைத் தெரியாது, இங்கு வந்தபின் இங்கு வாழும் வட ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா, மொரொக், துனிசியா, எகிப்தியர் மற்றும் யூதர்கள் இதைக் கட்டுக்கட்டாக சந்தையில் வாங்கிச் செல்வார்கள். அவர்கள் இதை அவித்து தேனீர் போல் ஒரு நாளைக்கு குறைந்தது 5 தரமாவது
    குடிப்பார்கள்.
    தென்னிந்திய சமையல் குறிப்புகளைப் பார்த்தே இதன் தன்மை அறிந்து உணவில், குறிப்பாக சலாட்டுக்குச் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.