கொத்தவரங்காய் உசிலி


தேவையானப்பொருட்கள்:

கொத்தவரங்காய் - பொடியாக நறுக்கியது ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும். காய் வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு: கொத்தவரங்காய்க்குப் பதில் பீன்ஸ், காரட், கோஸ், வாழைப்பூ மற்றும் விருப்பமான எந்தக் காயையும் உபயோகித்து இந்த உசிலியைச் செய்யலாம். காய்களே போடாமல் வெறும் பருப்பு உசிலி மட்டும் கூட செய்யலாம். மோர்குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. First time here. I know to read tamil but I cannot write well. You have a good collection of recipes.Keep up the good work.

    பதிலளிநீக்கு
  2. Hi Cilantro

    Thank you for visiting my site and your comments. If you want to read my recipes in English, you can check it at www.kamalascorner.com

    பதிலளிநீக்கு
  3. the recipes are good and we prepare in our house and we all ate its so tasty dad

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.