அவல் புட்டு
தேவையானப்பொருட்கள்:
அவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் (எண்ணை விடாமல்) அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும். (சாதாரண அரிசி புட்டிற்கு மாவு தயாரிப்பது போல்தான்).
முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை அடுப்பிலிருந்து ஈரக்கி வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதுமானது. பாகு இறுகி விடக் கூடாது. பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி, நெய், வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.
உடனேயும் சாப்பிடலாம். ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் புட்டு மேலும் உதிரி உதிரியாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.
சமையல் குறிப்பிற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
தகவலுக்கு நன்றி. இணைப்பிற்கு ஆவன செய்கிறேன்.
பதிலளிநீக்குஉஙகளது அவல் புட்டு பதிவிற்கு எனது பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளேன்.http://hainallama.blogspot.com/2013/06/blog-post_11.html
பதிலளிநீக்கு