அரிசி ரொட்டி
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
தண்ணீரில் உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். மாவு கெட்டியாகும் வரைக் கிளறி கீழே இறக்கி மூடி வைக்கவும். 10 அல்லது 15 நிமிடங்களுக்கு பிறகு மூடியைத் திறந்து விட்டு மாவை ஆற விடவும். மாவு சற்று ஆறி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது கைகளால் நன்றாக சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு பழ அளவு மாவை உருட்டி, சப்பாத்தி கட்டையால் அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். தோசைக் கல்லைக் காய வைத்து , அதில் அரிசி ரொட்டியைப் போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு திருப்பிப் போடவும். இப்பொழுது தோசைக் க்ரண்டியால் ரொட்டியை இலேசாக அழுத்தினால் உப்பி வரும். நன்றாக உப்பி வந்ததும் கல்லிலிருந்து எடுத்து விடவும். எல்லா மாவையும் இப்படியே அப்பளமாக இட்டு சுட்டெடுக்கவும்.
விளக்கமான செய்முறைப் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்
இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயச் சட்னி பொருத்தமாய் இருக்கும்.
வேறு வகை சட்னி அல்லது குருமா போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
kalakkureenga ponga :-)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு