காய்கறி சாலட்


கோடை நெருங்கி விட்டது. உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொளவது நல்லது. எளிமையான காய்கறி சாலட் குறிப்பு இதோ:

தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
புதினா இலை - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு (நீக்கியப் பகுதியை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கலாம்) மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி, அதன் மேல் காய்கறித்துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். (அலங்காரம் இல்லாமலும் இந்த சாலட் சாப்பிட சுவையாகவே இருக்கும்).

பார்ஸ்லி, லெட்டுஸ் கிடைத்தால், அதையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். குடமிளகாய் மற்றும் கோஸ் போன்றவற்றையும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

4 கருத்துகள்:

  1. ஐயோ.. படிக்கும்போதே உடம்பு சும்மா ஜில்லுனு ஆகுதே :-)

    சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. அதுவும் உபயோகமான கோடைக்கு எற்ற பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உழவன், விஜய், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.