தேவையானப்பொருட்கள்;பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
ஒரு குக்கரை அடுப்பிலேற்றி, அதில் நெய்யை விட்டு சூடாக்கவும். சீரகம், பட்டை இலை இரண்டையும் போட்டு சற்று வறுக்கவும். பின்னர் அத்துடன் பச்சை பட்டாணியைப் போட்டு சில விநாடிகள் வதக்கி, அத்துடன் ஊற வைத்த அரிசியை, நீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும். சிறிது கிளறி விட்டு 4 கப் நீரை விட்டு உப்பு போட்டு, குக்கரை மூடி, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விடவும்.
காரமில்லாத இந்த சாதம் குழந்தைகளுக்கு ஏற்றது. பெரியவர்கள், காரமான குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.