பாதாம் அல்வா


தேவையானப்பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப் (குவித்து அளக்கவும்)
சர்க்கரை - 1 கப் (தலைதட்டி அளக்கவும்)
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் அல்லது கேசரி கலர் - சிறிது
பாதாம் எஸ்ஸென்ஸ் - சிறிது

செய்முறை:

வெதுவெதுப்பான நீரில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதன் தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான வாணலியில் அரைத்த பாதாம் விழுதையும், சர்க்கரையையும் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை கரைந்து பாதாம் கலவை இளகி நீர்த்துக் காணப்படும். கிளறிக் கொண்டே இருந்தால் சற்று நேரத்தில் கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விடவும். அல்வா சூட்டிலேயே நெய் உருகி விடும். அத்துடன் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

குறிப்பு: கலரோ, பாதாம் எஸ்ஸென்ஸோ சேர்க்காமலும் இதை செய்யலாம். அல்வா வெண்மையாகவும், இயற்கை மணத்துடனும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.