மணத்தக்காளி கீரைக்கூட்டு


தேவையானப்பொருட்கள்:

மணத்தக்காளிக்கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2

செய்முறை:

மணத்தக்காளிக் கீரையை, அதன் தண்டிலிருந்து ஒவ்வொன்றாகக் கிள்ளி எடுத்து, நன்றாக அலசிக் கொள்ளவும். பின் அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்போடு மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பருப்பு மலர வெந்ததும் அதில் கீரையைப் போட்டு, உப்பையும் சேர்த்து, சிறு தீயில் வேக விடவும்.

இதனிடையே, தேங்காய்துருவல், பச்சை மிளகாய் சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதை கீரையுடன் சேர்த்துக் கிளறி விட்டு கொதித்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

பின்னர் அதில் கடுகு, வெங்காயம் (பொடியாக நறுக்கிப் போடவும்) தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது தொட்டுக் கொண்டு சாப்பிடவும் செய்யலாம்.

மணத்தக்காளி, வாய்ப்புண், குடற்புண் ஆகியவற்றை ஆற்ற வல்லது. சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

3 கருத்துகள்:

  1. ஒரு நாள் பண்ணி சாப்பிட்ட வேணியதுதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி ரவிஷங்கர் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு மிக்க நன்றி ரவிஷங்கர் அவர்களே.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.