காய்கறி இட்லி
தேவையானப்பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவா - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
காரட் - 1
பசளிக்கீரை - சிறிது (வேறு வகைக் கீரையையும் சேர்க்கலாம்)
பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்
காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கீரையையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு விழுது, ரவா, நறுக்கிய காய், கீரை, பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். தேவைபட்டால் சிறிது தயிர் அல்லது தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.
வண்ணமயமான, சத்துள்ள இட்லி தயார்.
குறிப்பு: இட்லி மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
ஏற்கனவே சாப்பிட்டு இருக்கேன். ஆனால் எப்படி செய்வார்கள் என தெரியாது. தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி ஜோதி அவர்களே. அவசரத்திற்கு, இதை சாதரண இட்லி மாவிலும் செய்யலாம். இட்லி மாவு மீந்து விட்டால், அதில் விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம். இட்லி தட்டில் மாவை ஊற்றும் முன்னர், அதில் சிறிது காய்கறித் துண்டுகளைத் தூவி விட்டு, அதன் மேல் மாவை ஊற்றினால், இட்லியின் மேற்புறத்தில் காய்கள் ஒட்டிக் கொண்டு, பார்க்க அழகாயிருக்கும்.
பதிலளிநீக்குஆ...ஹா... தப்பான சமயத்துக்கு இங்க வந்துட்டேன் போல இருக்கு.....
பதிலளிநீக்குநீங்க டிஸ்ப்ளே பண்ணி வச்சு இருக்கற ஐட்டம்ஸ் எல்லாத்தையும் பாத்தா, பசி வயித்த கிள்ளறது.....
நான் இங்க அப்பறமா வரேன்.......
(மொதல்ல பாக்கறச்சே, ரவா இட்லி மாதிரி இருந்தது.... அப்புறம் காய்கறிய எல்லாம் பாத்தா உடனே தான் தெரிஞ்சது, இது வேறன்னு.....)
வருகைக்கு மிக்க நன்றி கோபி அவர்களே. நிறைய காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். மதியம் மட்டும் சிறிது காய்கறி பொரியலோ, கூட்டோ சாப்பிடுகிறோம். அது போதாது. சாலட் கலாசாரம் இன்னும் நம் உணவில் இடம் பெறவில்லை. இப்படியெல்லாம் இட்லி மாவு, தோசை மாவு என்று எதிலாவது சேர்த்தால் உண்டு.
பதிலளிநீக்கு