வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்த ஒரு உணவுப்பொருள். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடல் பருமன், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க வல்லது. அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இதைச் சமைப்பதும் மிகவும் சுலபம். பொரியல், கூட்டு, பச்சடி போன்றவை செய்ய உகந்தது. மோர்க்குழம்பு, சாம்பார் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். வாழைத்தண்டு சாறெடுத்து, அதில் அரிசியைப் போட்டு வேகவத்து, வாழைத்தண்டு சாதம் அல்லது பொங்கல் செய்யலாம்.
வாழைத்தண்டு பொரியல்வாழைத்தண்டு கூட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.