மசால் வடை
தேவையானப்பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு நன்றாக ஊறியவுடன், அதை கழுவி, நீரை ஒட்ட வடித்து விடவும். ஒரு கையளவு ஊறிய பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளதை, சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். அத்துடன், தனியாக எடுத்து வைத்துள்ள ஊறிய கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துருவலைப் போட்டு நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, அதற்கு பதில் சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம். வடையில் சற்று காரம் தூக்கலாக வேண்டுமென்றால், பருப்பை அரைக்கும் பொழுது ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைக்கலாம். சிறிது புதினா, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்தால், வடை புதினா வாசனையுடன் இருக்கும்.
நன்றி மேடம்.
பதிலளிநீக்கு“கப்” அளவு என்பது எவ்வளவு?டம்ளர்? இதன் சரிக்குசமமாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பாத்திரத்தின்
உதாரணம் கொடுங்களேன்.
எங்கள் வீட்டில் கப் கிடையாது.
டபரா?டம்ளர்?கிண்ணம்?
வருகைக்கு மிக்க நன்றி கே.ரவிஷங்கர் அவர்களே. கப் என்பது சாதரணமாக ஒரு டம்ளர் அல்லது டவரா அளவுதான். 200 மில்லி பிடிக்கக்கூடிய எந்த ஒரு பாத்திரத்தாலும் அளக்கலாம். அரிசி அளக்கும் அரை ஆழாக்கையும் பயன்படுத்தலாம்.
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்குHi
பதிலளிநீக்குஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
கமலா உங்கள் சமையல் குறிப்புகளை இப்போதான் இப்போதான் எல்லாமே பார்த்தேன் எந்த குறிப்பை சொல்வது என்றே தெரியலை எல்லாமே பார்க்கவே பிரமாதமா இருக்கு என்பெயர் பல்கீஸ் நான் மலேசியாவில் வசிக்கிரேன் உங்க குறிப்புகளை உங்க பெயர்லையே இங்கு தமிழ் பேப்பரில் குடுக்கவா உங்கள் சம்மதம் இருந்தால் குடுக்கலாம் உன்ங்கள் தலம் எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு
பதிலளிநீக்குகமலா உங்கள் சமையல் குறிப்புகளை இப்போதான் இப்போதான் எல்லாமே பார்த்தேன் எந்த குறிப்பை சொல்வது என்றே தெரியலை எல்லாமே பார்க்கவே பிரமாதமா இருக்கு என்பெயர் பல்கீஸ் நான் மலேசியாவில் வசிக்கிரேன் உங்க குறிப்புகளை உங்க பெயர்லையே இங்கு தமிழ் பேப்பரில் குடுக்கவா உங்கள் சம்மதம் இருந்தால் குடுக்கலாம் உன்ங்கள் தலம் எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு
பதிலளிநீக்குபல்கீஸ்,
பதிலளிநீக்குதங்களின் அன்பான மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. எனது சமையற்குறிப்புகளை, தமிழ் பேப்பருக்கு கொடுக்கலாம். ஆனால் தயவு செய்து, என் பெயரும், என் வலைத்தளத்தின் லின்க்கும் வரும்மாறு பார்த்துக் கொள்ளவும். பிரசுரமானால், அந்தப் பக்கத்தை ஸ்கேன் அல்லது போட்டோ பிரதியை அனுப்பி வைத்தால், எனது வலைத்தளத்தில், தங்கள் பெயருடன் அதை வெளியிடுவேன்.
அன்புடன்
கமலா