கொள்ளுப்பொடி


உடம்பிலுள்ள கொழுப்பைக் குறைத்து, உடலை இளைக்க வைக்கும் தன்மை கொள்ளிற்கு உண்டு.

அதனால்தான் "இளைத்தவனுக்கு எள்ளு. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்னும் சொற்றொடர் வழக்கிலுள்ளது.

வாரம் ஒரு முறையாவது கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஊளைச்சதை நிச்சயம் குறையும்.

கொள்ளில், ரசம், சூப், குழம்பு, துவையல், சுண்டல் அனைத்தும் செய்யலாம். கொள்ளுப்பொடியைத் தயாரித்து வைத்துக் கொண்டால், சமையலில் சேர்க்க எளிதாக இருக்கும். கடைகளில் இந்தப்பொடி கிடைக்கிறது. வீட்டிலும் இதைத் தயாரிக்கலாம்.

தேவையானப்பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில், உப்பைத்தவிர, மேற்கண்ட பொருட்களை, தனித்தனியாக வறுத்தெடுத்து ஆற விடவும்.

ஆறியபின், உப்பு சேர்த்து நன்றாகப் பொடித்தெடுக்கவும்.

இந்தப்பொடியை, சூடான சாதத்தில் போட்டு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணையுடன் சாப்பிட சுவையாயிருக்கும். நெய், எண்ணை தவிர்த்தும் சாப்பிடலாம்.

ரசம் செய்யும் பொழுது, இந்தப்பொடியைச் சேர்த்து கொள்ளு ரசமாக செய்யலாம்.

துவையல், சூப் செய்யும் பொழுதும் உபயோகிக்கலாம்.

10 கருத்துகள்:

  1. Nice to meet you!
    Invite you to my blogspot.
    I major in medicine & law.
    Glad to share life experience with you.

    பதிலளிநீக்கு
  2. Nice to meet you!
    Invite you to my blogspot.
    I major in medicine & law.
    Glad to share life experience with you.

    பதிலளிநீக்கு
  3. சங்கயித், ராஜூ. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் வலைப்பதிவைப் பார்த்து பதிலளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் துபாய் ராஜா அவர்களே. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நாளா இதை பன்னனும்னு நினச்சுட்டு இருந்தேன்... உங்க ரெசிபி எல்லாமே நல்லா இருக்கு மேடம். :-)

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா அவர்களே.

    பதிலளிநீக்கு
  7. கமலா நல்ல குறிப்பு
    , இது நாம் ர‌ச‌ப்பொடி திரிக்கும் போது அதில் கூட‌ சேர்த்து திரித்து கொள்ள‌லாம்.

    பதிலளிநீக்கு
  8. ஆம் ஜலீலா. அப்படியும் செய்யலாம். ஆனால் எப்பொழுதும் கொள்ளு ரசம்தானா என்ற கேள்வி எழும். நான் ரசப்பொடி திரிப்பதேயில்லை. அவ்வப்பொழுது, மிளகு, சீரகம், மிளகாய், தனியாவை பொடித்துதான் ரசத்தில் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.