அவல் பாயசம்
தேவையானப்பொருட்கள்:
அவல் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 4 முதல் 5 கப் வரை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
தேங்காய் - சிறு துண்டுகளாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு மற்றும் தேங்காயை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் அவலைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.
பாலை அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விடவும். பால் கொதித்து வரும் பொழுது அதில் அவலைப் போட்டு வேக விடவும். அடி பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விடவும். அவல் நன்றாக வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து பாயசம் சற்று கெட்டியாகும் வரை வேக விட்டு வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.