கொண்டைக்கடலையை 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.
வேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், தேவை.
வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும்.
உங்கள் அடுப்பங்கரை சமையல் புதிதாக செய்பவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் சுலபமாக செய்ய உதவியாக இருக்கிறது.நன்றி பல.
பதிலளிநீக்குசெந்தாமரை.ஜெ