நவராத்திரி


நவராத்திரி செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்குகிறது.

செப்டம்பர் 27ம் தேதி சரஸ்வதி பூஜையும் (ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்), 28ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.

இந்த ஒன்பது நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான்.

தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

கொண்டைக்கடலை, பட்டாணி, காராமணி, வேர்க்கடலை, பச்சை பயிறு, மொச்சைக் கொட்டை, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, சோளம், மற்றும் அவரவர்கள் விருப்பம் போல் எந்தவகை தானியம் அல்லது பருப்பை உபயோகித்து, சுண்டலைத் தயாரிக்கலாம். செய்முறை எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். முழு தானியம் என்றால் 8 மணி நேரமும், பருப்பு வகை என்றால் 2 அல்லது 3 மணி நேரமும் ஊற வைத்து தாளிக்க வேண்டும்.

சுண்டல் குறிப்பு:
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
பல தானியச் சுண்டல்
காராமணி இனிப்பு சுண்டல்
கொண்டைக்கடலை சுண்டல்
கடலைப்பருப்பு சுண்டல்
சோளச்சுண்டல்

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.