சப்பாத்திக்கான பருப்பு
தேவையானப்பொருட்கள்:
பாசி பருப்பு (பயத்தம் பருப்பு) - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பயத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணை, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு மலர வேக விடவும். பசைபோல் குழைய விட வேண்டாம்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து பொரிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக மசிய வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்த பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை ஊற்றிக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து கீழே இறக்கி வைக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். கொத்துமல்லித் தழையை மேலே தூவி விடவும்.
சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற பருப்பு இது.
ஒருவருக்கு மட்டுமே பண்ணுவது என்பது தான் கஷ்டமாக இருக்கு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே. ஒருவருக்கு மட்டும் செய்ய வேண்டும் என்றால், ஒரு கை அளவு பயத்தம் பருப்பை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு வேக விட்டு, "ஆலக்கரண்டி"யில் தாளித்துக் கொட்டலாம்.
பதிலளிநீக்குAmma
பதிலளிநீக்குEppati veg biryani cook pannuvathu entru sollitharuvinggala.
Thank
There are different method to cook veg biriyani. For simple recipe, check my "Brinji Rice" recipe.
பதிலளிநீக்கு