கடல் பாசி புட்டிங்
உடனடி அல்வா செய்வதற்காக "கிட்ஸ் பாம்பே அல்வா மிக்ஸ்" பாக்கெட்டை வாங்கி வந்துப் பார்த்தால், அதில் சைனா கிராஸ் அல்லது அகர் அகர் என்று அழைக்கப்படும் கடல் பாசியில் தயாரித்த மாவு என்று போட்டிருந்தது. ஆகா.. கடல் பாசி உடற்சூட்டைத் தணிப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க உதவுமே என்று, அதில் குறிப்பிட்டிருந்தபடி செய்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனால், அந்த பாக்கெட்டில் உள்ளது போல் இது அல்வா போல் இல்லாமல் புட்டிங் போன்றுதான் இருந்தது.
கடல் பாசியில் புட்டிங் செய்ய வேண்டுமென்றால், இந்த உடனடி பாம்பே மிக்ஸைப் பயன் படுத்தலாம்.
தேவையானப்பொருட்கள்:
கிட்ஸ் பாம்பே அல்வா மிக்ஸ் - 1 பாக்கெட் (80 கிராம்)
வெதுவெதுப்பான பால் - 2 கப்
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில், பாக்கெட்டில் உள்ள மாவைக் கொட்டி, அத்துடன் பாலைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கொதிக்கும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 10 நிமிடங்களில் பால் கொதித்து, திக்காக பாயசம் போல் இருக்கும். இதை உடனடியாக எடுத்து ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும். 30 அல்லது 45 நிமிடங்கள் ஆற விட்டால் நன்றாக உறைந்து விடும். பின்னர் அதை கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு எடுக்கவும். 20 துண்டுகள் வரை கிடைக்கும்.
இதைத் தட்டில் ஊற்றாமல், சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆறவிட்டு, கவிழ்த்து எடுத்தும் பரிமாறலாம். பார்க்க அழகாக இருக்கும்.
"இதைத் தட்டில் ஊற்றாமல், சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆறவிட்டு, கவிழ்த்து எடுத்தும் பரிமாறலாம். பார்க்க அழகாக இருக்கும். " அழகா இருக்கும், சுவையா இருக்குமா? பாசின்னு சொல்றீங்களே?
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி அண்ணாமலை அவர்களே. சுவையாகவும் இருக்கும். இளநீர் வழுக்கைப்போல் இருக்கும். உடற்சூட்டைத் தணிக்க வல்லது. தமிழில் "பாசி" என்று அழைக்கப்பட்டாலும், இது கடலில் உற்பத்தியாகும் ஒரு வித செடியிலிருந்து எடுக்கப்படுவதுதான். புல் வகையைச் சேர்ந்தது.
பதிலளிநீக்குநன்றி. மேலதிக தகவலுக்கு. எங்க கிடைக்கும்னு தெரியலே விசாரிப்போம்..
பதிலளிநீக்குPls tell us some Electric Rice Cooker receipies it will be more helpful for bachulors
பதிலளிநீக்குPls tell us some Electric Rice Cooker receipies it will be more helpful for bachulors
பதிலளிநீக்குஎளிதான இனிப்பு செய்முறை.
பதிலளிநீக்குசெய்து பார்த்து எழுதுகிறேன்
நல்ல சுவையான பதிவு வாழ்த்துகள் சகோதரி கமலா
பதிலளிநீக்குபி.கு
கடல்பாசி உள்ள ஒரு வேதி பொருள் நம் உடலை என்றும் இளமையாக வைத்திருக்க செய்யவல்லது . இது பல ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
யான்சோன் ஞானி பாடல் (சைனா பாடல் மொழியாக்கம்)
பாரப்ப உபயன் சொல்வேன்
காயசித்தி உடல்தான் என்பேன்
கடல் தாய் கொடுத்த ஆசி
மனிட நீ தினம் உன்பாய் கடல்பாசி...
வருகைக்கு மிக்க நன்றி புதுவை சிவா அவர்களே. அருமையான புதிய தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு....
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி...
மிக்க நன்றி சங்கவி அவர்களே.
பதிலளிநீக்குhalwa mix price yenna pa tamilnadula kedaikuma
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி. இதன் விலை 20 அல்லது 25 ரூபாய். சரியாக நினைவில்லை. சென்னையில் எல்லா கடைகளிலும் (குறிப்பாக சூப்பர் மார்கெட்) கிடைக்கிறது.
பதிலளிநீக்குLooks super!!!!!
பதிலளிநீக்கு