புட்டு பயறு
புட்டு, கேரளத்தில் பிரபலமான காலை உணவு. புட்டுடன், கடலைக்கறி, பழம், பப்படம் சேர்த்து உண்பார்கள்.
கன்யாகுமரி மாவட்டத்திலும் புட்டு கடலைக்கறி பிரசித்தம்.
"சிறு பயறு" என்று அழைக்கப்படும் பச்சை பயறை வெறுமனே வேக வைத்து, புட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். மசாலா எதுவும் சேர்க்க படாத இந்த பயிறு ஆரோக்கியமானதும் கூட.
நேரம் கிடைப்பவர்கள் வீட்டிலேயே புட்டு மாவு தயாரித்துக் கொள்ளலாம். இல்லையெனில், கடைகளில் புட்டு மாவு கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
தேவையானப்பொருட்கள்:
புட்டு மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.
புட்டுக்குழலில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைப் போட்டு அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் புட்டு மாவை போடவும். இதே போல் தேங்காய்த்துருவலையும், மாவையும் மாற்றி மாற்றிப் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
புட்டுக்குழல் இல்லையென்றால், தேங்காய்த்துருவலையும் மாவையும் ஒன்றாகக் கலந்து, இட்லி தட்டில் போட்டு ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
வேக வைத்த பயறு
தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
புட்டும், பயறும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு.
எங்க கேரளத்திலே இனிப்பு சுவை வேண்டுமென்றால் புட்டுக்கு நெய்யும், சர்க்கரையும், வாழைப்பழமும் பிசைந்து சாப்பிடுவோம்.
பதிலளிநீக்குஅல்லது கடலைக்கறி நல்ல சூப்பரான சேர்க்கை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உண்மை. புட்டிற்கு நெய், சர்க்கரை, பழம் அருமையான சேர்க்கை.
பதிலளிநீக்கு