காராபூந்தி


தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - இரண்டு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கேசரி கலர் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
வேர்க்கடலை - 1/2 கப்
பூண்டுப்பற்கள் - 3 அல்லது 4
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு சூடாக்கவும்.

வாயகன்ற ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், கேசரி பவுடர், சோடா உப்பு, உப்பு ஆகியவற்றை போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு, தோசை மாவு பதத்திற்குக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

பூந்திக்கரண்டியை, காய்ந்துக் கொண்டிருக்கும் எண்ணையின் உயரே தூக்கிப்பிடித்துக் கொண்டு, அதன் மேல் கரைத்து வைத்திருக்கும் மாவை வேறொரு கரண்டியால் எடுத்து ஊற்றி தேய்த்து விடவும். மாவு பூந்தி கரண்டியின் ஓட்டை வழியே எண்ணையில் விழுந்து, சிறு உருண்டையாக மிதக்கும். பூந்தி சிவக்க வெந்தவுடன், எண்ணையிலிருந்து, சாரணியை உபயோகித்து எடுத்து தட்டில் போட்டு வைக்கவும். எல்லா மாவையும் இப்படியே பூந்தியாகப் பொரித்தெடுக்கவும்.

ஒரு சிறு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வறுத்து, கடைசியில் பூண்டை சற்று நசுக்கிப் போட்டு வதக்கி, எல்லாவற்றையும் பூந்தியின் மேல் கொட்டவும். சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

கவனிக்க:

பூந்திக்கரண்டி இல்லையெனில், சாதரண ஜல்லிக்ரண்டி (சாரணி கரண்டி) அல்லது காய் வடிகட்டும் சிறு துளையுள்ள தட்டு ஆகியவற்றை உபயோகித்தும் செய்யலாம். பொரித்த பூந்தியை எண்ணையில் இருந்து எடுப்பதறகு, குழிவான வலைக்கரண்டியை (சூப் வடிகட்டி போன்றது) உபயோகித்தால், பூந்தியை சுலபமாக எடுக்கலாம்.

7 கருத்துகள்:

  1. மணி மணியான காராபூந்தி அழகிய பவுலில்.சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. ஸாதிகா - தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா ஆஹா இது நம்ம பேவரைட் ஆச்சே.சூப்பர்.இனி வீட்டில் செய்து அசத்தனும்..

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அருமையான காராபூந்தி எங்க் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானது

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி ஆசியா உமர்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.