ஓட்ஸ் பொங்கல்


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

இஞ்சியின் தோலை சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில், ஓட்ஸ், பயத்தம் பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக (தொட்டால் சுடும் அளவிற்கு) வறுத்தெடுக்கவும்.

பிரஷர் குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

சிறு வாணலி ஒன்றில் நெய்யை விட்டு சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.

சட்னி, சாம்பார் அல்லது கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.

5 கருத்துகள்:

  1. அடடா..சுலபமாக செய்து விடலாமே.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி ஸாதிகா. செய்து பார்த்துவிட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. அய்ய்....

    ஓட்ஸ்ல பொங்கலா? கமலா மேடம்.. படு சூப்பர் ரெசிப்பி...

    ரொம்ப புதுசா இருக்கு... ஓட்ஸுக்கு குழையும் தன்மை இருக்கு.. ஸோ, பொங்கலுக்கு ஓகே தான்னா கூட, ஓட்ஸ் கொதிச்சா ஒரு வாசனை வருமே.. பரவாயில்லையா?

    அப்புறம் பொங்கலுக்கு தான் மிளகு இருக்கே.. நீங்க ஏன் பச்சை மிளகாய் போட சொல்லி இருக்கீங்க...!!??

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி கோபி. ஓட்ஸை இலேசாக வறுத்து போடுவதால் வாசனை இருக்காது. ஆனாலும் ஓட்ஸ் சுவைதான் இருக்கும். பச்சை மிளகாய் சேர்ப்பதால் பொங்கலுக்கு சுவை சற்று கூடும்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.