ரவா கொழுக்கட்டை


தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
தேங்காய்த்துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, மிளகு, சீரகப் பொடி, காய்ந்த மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).

வறுத்த ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் ஊறிய பயத்தம் பருப்பு (நீரை ஒட்ட வடித்து விடவும்), தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்து, 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இட்லி தட்டில் மாவை கொழுக்கட்டையாகப் பிடித்து வைத்து, ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 10 கொழுக்கட்டைகள் வரை கிடைக்கும்.

1 கருத்து:

  1. அய்ய்...

    ரவா கொழுக்கட்டை ரொம்ப நல்லா இருக்கு...

    ஆனா ஃபோட்டோல பார்த்தா, அரிசி உப்புமாவ பிடிச்சு வச்சா மாதிரியே இருக்கு...

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.