பப்பாளிப்பழ கேசரி


தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
சர்க்கரை - 1 அல்லது ஒன்றரைக்கப்
நெய் - 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
காய்ந்த‌ திராட்சை - சிறிது
ஏல‌க்காய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாண‌லியில் 1 டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.


அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்

அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இந்த கேசரிக்கு "புட் கலர்" எதுவும் சேர்க்கத் தேவையில்லை. பப்பாளி சேர்த்தவுடன், கேசரிக்கு இயற்கையான ஆரஞ்சு நிறம் கிடைத்து விடும்.

4 கருத்துகள்:

  1. மிக்க நன்றி.உங்கள் தளம் மிகவும் அருமையாக உள்ளது.தொடர்ந்து எழுதினால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான இனிப்பு. பைனாப்பிள், மாம்பழம் இதுகள்லதான் செஞ்சுருக்கேன். பழகேசரி சத்துள்ளதும் ஆச்சே..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வலைச்சரத்தில்….

    போஜனம் செய்ய வாருங்கள்!

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_13.html

    இன்று உங்களது சுட்டி வலைச்சரத்தில்….. வந்து படியுங்களேன்…

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.