பயத்தங்காய் கேரட் பொரியல்


தேவையானப்பொருட்கள்:

பயத்தங்காய் - ஒரு சிறு கட்டு
கேரட் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பயத்தங்காய், கேரட் இரண்டையும் நன்றாகக் கழுவிக் கொள்ளவும். பயத்தங்காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். கேரட்டின் மேல் தோலை சீவி விட்டு, அதையும் பயத்தங்காய் அளவிற்கு 2 அங்குலத்தில் மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள காயையும் போடவும். அத்துடன் சாம்பார் பொடி, ம்ஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இரண்டு அல்லது மூன்று கையளவு தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கலந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடவும். அவ்வப்பொழுது மூடியைத் திறந்து, காயைக் கிளறி விடவும். காய் வெந்ததும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

4 கருத்துகள்:

  1. பதிவர் தென்றல் மாத இதழில் வெளியிட பின்வரும் தங்கள் இடுகையை http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_03.html
    & http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_25.html#link
    பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். தங்கள் அனுமதி தேவை. விவரங்களுக்கு thagavalmalar.blogspot.com பாருங்கள். தங்கள் விருப்பத்தை எனக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தவும்.thambaramanbu@gmail.com நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புகைபடத்த பாக்கும்போதே எச்சில் ஊருது

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு மிக்க நன்றி ராஜா..

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.