வெண்டைக்காய் வதக்கல்
தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் - 10 முதல் 15 வரை
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி, துடைத்து விட்டு 2 அங்குல நீளத்திற்கு சற்று சாய்வாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு, காயின் மேல் பிரவுன் கலரில் புள்ளிகள் தோன்றும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் மினுமினுப்பாகும் வரை வதக்கவும். அத்துடன் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மற்றும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, மேலும் சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைக்கவும்.
இதை சாதத்திற்கு மட்டுமல்லாது, சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.