ஓட்ஸ் தோக்ளா
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
ரவா - 1/2 கப்
தயிர் - 2 கப்
கேரட் - 1
குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
கொத்துமல்லி சட்னி - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
ஈனோ ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன்
சமையல் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெறும் வாணலியில், ஓட்ஸையும், ரவாவையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து ஆற விடவும். ஆறியவுடன், இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
கொத்துமல்லி சட்னி செய்ய:
1 கப் நறுக்கிய பச்சைகொத்துமல்லி இலை, 1 அல்லது 2 பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, ஒரு சிட்டிகை சர்க்கரை, 2 அல்லது 3 சிட்டிகை உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
கேரட்டை துருவிக் கொள்ளவும்.
இட்லி பானை/குக்கர் அல்லது ஒரு அகன்ற வாணலியில் 3 அல்லது 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
ஓட்ஸ் மாவில் ஈனோ ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் நீரை விட்டுக் கலக்கவும்.
வட்டமான ஒரு கிண்ணம் அல்லது டிபன் பாக்ஸை எடுத்து அதில் சிறிது எண்ணையை தடவவும். மாவில் பாதியை அதில் ஊற்றவும். அதன் மேல் துருவி வைத்துள்ள கேரட்டில் பாதியை தூவவும். குடமிளகாய் துண்டுகளில் பாதியையும் தூவவும். 2 அல்லது 3 டீஸ்பூன் கொத்துமல்லி சட்னியை பரவலாக ஊற்றவும். பின்னர் மீதி மாவை அதன் மேல் ஊற்றவும். மீதமிருக்கும் கேரட்/குடமிளகாய் ஆகியவற்றை அதன் மேல் தூவி விடவும். சிறிது கேரட்/குடமிளகாயை அலங்கரிக்க தனியா வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை நன்றாக மூடி, கொதிக்கும் நீரின் நடுவே வைத்து, அந்த பாத்திரத்தையும் மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும். மாவு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, ஒரு கத்தியை வெந்த மாவில் சொருகி, வெளியே எடுத்தால், கத்தியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வர வேண்டும்.
பின்னர், மாவு வைத்துள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து, மூடியை திறந்து சற்று ஆற விடவும். ஆறியவுடன், ஒரு கத்தியால் இலேசாக நெம்பி விட்டு எடுத்து ஒரு தட்டில் போட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன் மேல் மீதமுள்ள கேரட், குடமிளகாயைத்தூவி, கொத்து மல்லி சட்னியுடன் பரிமாறவும்.
வெங்காய சட்னியும் இதற்கு பொருத்தமாய் இருக்கும்.
சூப்பரா இருக்கு . இந்த வார இறுதியில் செய்து பார்கிறேன்.
பதிலளிநீக்குசூப்பர் ! நன்றி சகோதரி !
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் - மிக்க நன்றி.
பதிலளிநீக்குசாருஸ்ரீராஜ் - மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
நான் அடிக்கடி இங்கு வந்து போவென் உங்க எல்லா ரெசிப்பிஸும் எனக்கு மிக பிடிக்கும் எளிய முறை + பொருட்களின் அளவும் கரெக்டா இருக்கும்.
பதிலளிநீக்குஅடுத்த தடவை உங்க ஒட்ஸ் டோக்ளா தான்.
விஜி,
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு, தங்கள் கருத்தைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
அருமையாக செய்து இருக்கீங்க.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆசியா.
பதிலளிநீக்குநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு