கேழ்வரகு இட்லியை வெவ்வேறு முறைகளில் தயாரிக்கலாம்.
1 கப் கேழ்வரகு, 1 கப் இட்லி அரிசி, 1/2 கப் உளுத்தம் பருப்பு, 2 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு போட்டு கரைத்து, புளிக்க வைத்து, மறுநாள் இட்லி அல்லது தோசை செய்யலாம்
கேழ்வரகிற்குப்பதில், கேழ்வரகு மாவை சேர்த்தும் செய்யலாம். மேற்கூறிய பொருட்களில், கேழ்வரகை தவிர்த்து விட்டு மற்ற அனைத்தையும் ஊற வைத்து அரைத்து, அத்துடன் 2 கப் கேழ்வரகு மாவையும் சேர்த்து, உப்பு போட்டு கரைத்து, இரவு முழுவதும் புளிக்க விட்டு, மறுநாள் இட்லி/தோசை சுடலாம்.
அல்லது, வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவில் (2 கப் மாவிற்கு 1 கப் கேழ்வரகு மாவு) கேழ்வரகு மாவைச் சேர்த்து, அத்துடன் சிறிது உப்பும், 1/2 டீஸ்பூன் "ஃபுரூட் சால்ட்டும்" சேர்த்துக் கலந்து, இட்லி/தோசை செய்யலாம்.
நான் இரண்டாவதாகக் கூறியுள்ள முறைப்படி, அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து, அத்துடன், கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, புளிக்க வைத்து இட்லி/தோசை செய்தேன்.
மாவில் சுவைக்காக, கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி செய்தேன்.
தோசை சுட,. இட்லி மாவில் மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசையாக சுட்டெடுக்கவும்.
கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.
சூப்பர் ! நன்றிங்க !
பதிலளிநீக்குகேழ்வரகு தோசை முறு முறு என்று பார்க்கவே நன்றாக இருக்கே!
பதிலளிநீக்குசெய்து விடுகிறேன்.
நன்றி.
திண்டுக்கல் தனபாலன், கோமதி அரசு - வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு