ஓட்ஸ் குல்ஃபி


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
காய்ச்சி ஆறிய பால் - 2 கப்

செய்முறை:

மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறி, இறக்கி ஆற விடவும்.
 
ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி, ஃபிரீசரில் வைத்து 3 முதல் 4 மணி நேரம் உறைய விடவும். 
 
 
குல்ஃபி அச்சு இல்லெயென்றால், ஒரு சிறி அலுமினிய டிரேயில் ஊற்றி, மேலே அலுமினிய காகிதத்தால் மூடி உறைய விடலாம்.  அதுவும் இல்லையென்றால், ஒரு சிறிய டிபன் பாக்ஸில் ஊற்றி மூடி வைத்து செய்யலாம்.
 
பரிமாறு முன், குல்ஃபி அச்சை வெளியே எடுத்து, குழாய் தண்ணீரில் காட்டி விட்டு, மூடியைத் திறந்து ஒரு கத்தியால் சற்று நெம்பி விட்டால், எளிதாக குல்ஃபி அச்சிலிருந்து வந்து விடும்.
 
பின்குறிப்பு:

1. நன்கு காய்ச்சி ஆறிய பாலை உபயோகப்படுத்தவும்.

2. குயிக் குக்கிங் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, பொடித்து அந்த பொடியை சேர்க்கவும். பதப்படுத்தாத முழு ஓட்ஸ் என்றால், வெறும் வாணலியில் போட்டு சற்று வறுத்து விட்டு பொடிக்கவும்.
 
3. நான் MTR பாதாம் பீஸ்ட் பவுடரை இதில் சேர்த்துள்ளேன். அதிலேயே, பாதாம், பால் பவுடர், ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்ந்திருப்பதால், தனியாக வேறு எதையும் சேர்க்கவில்லை. எந்த பிராண்ட் பாதாம் டிரிங்க் பவுடரையும் உபயோகிக்கலாம். இல்லையென்றால், சாதாரண பால் பவுடரைச் சேர்த்து, வாசனைப் பொருட்களையும் தனியாகச் சேர்த்து செய்யலாம்.

4. எளிதாக செய்ய வேண்டுமெனில், கடைகளில் ரெடிமேடாக "குல்ஃபி மிக்ஸ்" கிடைக்கிறது. அதை உபயோகித்தும் செய்யலாம்.

3 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.