தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை (தேங்காய் எண்ணை) - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி, துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து, பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வதக்கவும். பிறகு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். காய் பாதி வெந்ததும் அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அரிசி மாவை அதன் மேல் சிறிது சிறிதாகத் தூவி வதக்கவும். காய் நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
அரிசி மாவு சேர்ப்பதால் காய் கொழகொழப்பில்லாமல் இருக்கும்.
வதக்கல் நல்லா இருக்கு... நன்றி சகோ...
பதிலளிநீக்கு