தேவையானப்பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் 1/2 கப் நெய்யை விட்டு சூடானதும் அதில் கோதுமை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி, கலந்து வைத்துள்ள மாவின் மேல் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி விடவும். பின்னர் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
கோதுமை மாவில் லட்டா...! இதுவரை வீட்டில் செய்ததில்லை...
பதிலளிநீக்குமிக்க நன்றி...
லட்டு படிக்கும் பொழுது நல்லாதான் இருக்கு செஞ்சி சாபிடனம்னு தோனுது அதுக்கு எங்க வீட்டு அம்மா மனசு வைக்கனுமே என்ன செய்ரது.
பதிலளிநீக்கு