உருளைக்கிழங்கு தோசை


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, துருவிக்கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, மைதா, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.  பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி எண்ணை தடவி, கல் சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி  வட்டமாக பரப்பி விடவும்.  தோசையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு வேக விடவும்.  ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து பரிமாறவும்.

கவனிக்க:  இது சாதாரண தோசையை விட வேக நேரமாகும்.  ஒரு தோசை முருகலாக வேக 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும்.

3 கருத்துகள்:

  1. வித்தியாசமான தோசையாக இருக்கே. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இட்லியைப் போல் செய்ய முடியாது. அப்படி செய்தால் சுவையாக இருக்காது. தோசையாக செய்யும் பொழுது எண்ணை விட்டு முறுக விடுவதால், பிரஞ்ச் பிரை போன்ற ருசியுடன் இருக்கும்.

    இட்லிதான் செய்ய வேண்டுமெனில், இட்லி மாவில் உருளைக்கிழங்கைத் துருவிப் போட்டு செய்து பார்க்கலாம். ஆனால் உருளைக்கிழன்கு ஆவியில் வேகும் பொழுது இட்லி அழுத்தமாகி விடும். சிறிது சோடா உப்பு சேர்த்துக் கொண்டால், மிருதுவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.