தேவையானப்பொருட்கள்:
சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
டபிள் பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு மிளகு அளவு அல்லது பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லை இலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
செய்முறை:
டபிள் பீன்ஸை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கசகசாவைப் போட்டு சில வினாடிகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், வறுத்த கசகசா, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள டபிள் பீன்ஸை சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நெய் சேர்ப்பதானால் அதையும் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கி வைக்கவும்.
அருமை... நன்றி...
பதிலளிநீக்குபட்டர்பீன்ஸ் சாதம் பார்க்கவே அழகா இருக்கு.நவராத்திரி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஹாய் கமலா
பதிலளிநீக்குஉங்களுடைய அனைத்துக் குறிப்புகளும் படங்களும் மிக அருமை
மேலும் பல நல்ல குறிப்புகளைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்குங்கள்
வாழ்த்துக்கள் தோழி
எஸ். கிருபா