தினை தோசை
தேவையானப்பொருட்கள்:
தினை மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை - 4 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீரை விட்டு, தோசை மாவு பதத்திற்கு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணை தடவி விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும் (ரவா தோசைக்கு ஊற்றுவது போல்). ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பி போட்டு மறு பக்கமும் சிவக்க வெந்தவும் எடுத்து வைக்கவும்.
இதற்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
கவனிக்க: தினை மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. இதில் அரிசி மாவிற்குப் பதில், ஒரு கரண்டி சாதரண தோசை மாவையும் சேர்க்கலாம். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.