கத்திரிக்காய் காரக்குழம்பு


தேவையானப் பொருட்கள்:

கத்திரிக்காய் - 3
சாம்பார் வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவெப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சாம்பார் வெங்காயத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, பெரிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். அதில் தேங்காய், சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். ஆற வைத்து அரைத்து எடுக்கவும்.

மீதி எண்ணையை வாணலியில் விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு வறுக்கவும். பின் சாம்பார் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து காய் வெந்தவுடன், அரைத்து வைத்திருக்கும் விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவும். நிதானமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

2 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மணிகண்டன் அவர்களே.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.