கொண்டைக்கடலை மசாலா குழம்பு


தேவையானப் பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
புளி - சிறு எலுமிசசம் பழ அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
ம்ஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவு முழுதும் ஊற வைக்கவும். அல்லது 8 மணி நேரம் ஊறியபின், குக்கரில் 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

புளியையும் உப்பையும் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாகக் கரைத்து வடித்துக் கொள்ளவும். புளித் தண்ணீர் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளித்தண்ணீரில், தக்காளியை சிறியதாய் வெட்டி சேர்க்கவும். மேலும் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெந்த கடலை சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். நன்றாக கலக்கி விட்டு, சிறு தீயில் கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், பட்டை, சோம்பு சேர்த்து வ்றுக்கவும். பின், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.