மோகன் டால்



தேவையானப் பொருட்கள்:

கடலைமாவு - 2 கப்
பால் பவுடர் - 2 கப்
நெய் - 2 கப்
சர்க்கரை - 3 கப்
வெனிலா எஸ்ஸென்ஸ் - இரண்டொருத் துளிகள்
முந்திரிப்பருப்பு சீவியது - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் மற்றும் பிஸ்தாப் பருப்பு சீவியது - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு கனமான வாணலியில் எல்லா நெய்யையும் விட்டு சூடாக்கவும். நெய் சிறிது சூடானவுடன் அதில் கடலை மாவைக் கொட்டி வறுக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து, கீழே இறக்கி வைக்கவும். சிறிது ஆறியவுடன் (மாவு லேசான சூட்டுடன் இருக்க வேண்டும் ) அதில் பால் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

வேறொருப் பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையைச் சேர்த்து கம்பிப்பாகு பதத்திற்குக் காய்ச்சவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, வறுத்த கடலை மாவைக் கொட்டிக் கிளறவும். மாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் வரை கிளறி இறக்கி வைத்து, வெனிலா எஸன்ஸைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவியத் தட்டில் கொட்டி பரப்பவும். அதன் மேல் சீவி வைத்துள்ள முந்திரி, பாதம், பிஸ்தாப் பருப்புகளைத் தூவி விடவும்.

நன்றாக ஆறியபின், கத்தியால் கீறி, சதுரத் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.