சில சுண்டல் குறிப்புகள்
கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, காராமணி, வேர்க்கடலை, மொச்சைக்கொட்டை, காய்ந்த பட்டாணி, சோளம், பயத்தம்பருப்பு ஆகியவை சுண்டல் செய்ய ஏற்றவை.
கடலையை நன்றாக ஊற வைத்து, பின்னர் வேக வைக்கவும்.
பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு என்றால் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து, திறந்த பாத்திரத்தில் வேக வைக்கவும்.
மற்ற கடலைகள், என்றால் 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.
வேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு (விருப்பப்பட்டால்),தேவை.
வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
கவனிக்கவும்:
கீழே இறக்குமுன், தேவைப்பட்டால், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
எலுமிச்சம் பழச்சாற்றிற்கு பதில், ஒரு துண்டு பச்சை மாங்காயை, சிறு துண்டுகளாக நறுக்கி
சேர்க்கலாம். கேரட்டை, கொத்துமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.