பறங்கிக்காய் ரொட்டி

தேவையானப் பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
துருவிய பறங்கிக்காய் - 1 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

மேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி இடுவது போல் இட்டு, தோசைக்கல்லில் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.