தேவையானப் பொருட்கள்:
ரவா - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
கசகசா - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், ரவா, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்து, அதன் மேல் நெய் சேர்த்து, அப்பளத்திற்கு இடிப்பது போல் இடித்து எடுக்கவும்.
வெறும் வாணலியில் தேங்காய்த்துருவல், கசகசா இவற்றை தனித் தனியாக் வறுத்துக் கொள்ளவும். அத்துடன் சர்க்கரையைச் சேர்த்து இடித்து பொடியாக்கவும். அத்துடன் ஏலக்காய் பொடியையும் நன்றாகக் கலந்துக் கொள்ள வேண்டும். இது பூரணம்.
ஒரு தட்டில் 1 டேபிள்ஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் அரிசி மாவு இரண்டையும் போட்டு, நன்றாக கைகளால் குழைக்கவும். அது நுரையாக திரண்டு வரும். அதில் பிசைந்து இடித்து வைத்துள்ள மாவைப் போட்டு மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இந்த மாவை சிறு உருண்டைகளாக்கி மெல்லிய அப்பளமாக இட வேண்டும்.
தோசைக்கல்லில் போளி சுடுவது போல் பக்குவமாய் சுட்டு அடுப்பிலிருந்து இறக்கியதும், சுட்ட போளியில், ஒரு ஸ்பூன் பூரணத்தைத் தூவி, சூட்டோடு சுருட்ட வேண்டும். சூடு குறைந்தால் சுருட்ட வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.