காரட் வடை

தேவையானப் பொருட்கள்:

காரட் - 2
கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்தமிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை / கொத்துமல்லி - சிறிது
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

காரட்டை தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறிய கடலைப்பருப்பை, தண்ணீரை வடித்துவிட்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், சோம்பு, துருவிய காரட், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசையவும்.

வாணலியில் தேவையான எண்ணையை காய வைத்து, அதில் ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.