கத்திரிக்காய் கடலைமாவு கறி
தேவையானப் பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 அல்லது 6
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 சிறு துண்டு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும். காய் வெந்தவுடன், அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கடலைமாவு ஆகியவற்றை தூவவும். நன்றாகக் கிளறிவிட்டு, 2 அல்லது 3 நிமிடம் அடுப்பில் வைத்து, கீழே இறக்கி வைக்கும் முன்னர், வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துத் தூவவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.