தேவையானப் பொருட்கள்:
பால் பவுடர் - 3 கப்
மைதா - 3/4 கப்
கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - 4 கப்
நெய் - 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை விட்டு அதில் மைதா, கோகோ இரண்டையும் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அதில் பால் பவுடர், சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து கை விடாமல் கிளறவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாகி நுரைத்து வரும் பொழுது, நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியபின், துண்டங்களாக வெட்டி எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.